வலைப்பக்க உருவாக்கப் பயிற்சிகள்
தயாரிப்பு: சுபாஷினி கனகசுந்தரம்
[Suba's Campus]



குறிப்பு:
முரசு அஞ்சல் எழுத்துருவை உங்கள் கணினியில் இறக்கிக் கொள்ள இங்கே தட்டவும்.
முரசு அஞ்சல் எழுத்துக்களை உங்கள் கணினியில் சேர்த்துப் பயன்படுத்த சில பயன் மிக்க வழிமுறைகள்....!

உள்ளடக்கம்

பயிற்சி 1 - முதல் பக்கத்தை உருவாக்குதல்



பக்கங்களின் பெயர்கள் / கோப்புகள்

தயாரிக்கப் போகும் எல்லா கோப்புக்களையும் படங்களையும் பல இடங்களில் போட்டு வைப்பது சரியான முறையன்று. தொடர்புகளை ஏற்படுத்தும் போதும் படங்களை சேர்க்கும் போது அவை அனைத்தும் முறையாக தொகுக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

உதாரணமாக சித்த மருத்துவம் சம்பந்தப்பட்ட ஒரு வலைப்பக்கத்தை உருவாக்க நீங்கள் திட்டமிட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். வலைப்பக்கத்தின் முதல் பக்கம் பொதுவாக இவ்வலைப்பக்கத்தின் நோக்கம் அதன் உள்ளடக்கம் தொடர்பு, வலைப்பக்கத்தை நடத்துபவர் ஆகியோரின் பெயரை வெளிப்படுத்த வேண்டும். உதாரணமாக,
பக்கத்தின் தலைப்பு
பக்கம் உருவாக்குயதன் நோக்கம்
அதன் பயன்
உள்ளடக்கங்கள்
தொடர்புக்கான விசயங்கள்
போன்றவை இப்பகுதியில் சேர்க்கப்பட வேண்டும்.

Back to top



ஒரு எளிய பக்கம்

படி 1.
தயாரிக்கும் முறை

1. C அல்லது D வன் தகட்டில் siddha என்ற பெயரில் ஒரு folder ஒன்றினைப் பெயரிட்டு உருவாக்குங்கள்.
2. அடுத்ததாக notepad (Programs -->Assesories -->Notepad) அழுத்தி தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
3. இந்தக் கோப்பில் தான் உங்களது முதல் பக்கத்தை உருவாக்கப் போகின்றீர்கள். இந்தக் கோப்பிற்கு index.html என்று பெயரளித்து இதனை siddha folder-இல் சேர்த்து வைக்கவும்.

படி 2.

1. இப்பொழுது இந்த index.html என்ற கோப்பில் உங்களின் முதல் பக்கத்திற்குத் தேவையான ப்ரோக்ரம் வரிகளைச் (program codes) சேர்க்கப் போகின்றீர்கள். அவை இவ்வாறு அமைந்திருக்க வேண்டும்.
< html >
	< head>
		< title>   < /title >


	< /head >
	< body >

	< /body >
< /html >
2. மேல் குறிக்கப்பட்ட வரிகள் உங்களின் ஒவ்வொரு வலைப்பக்க பகுதிகளுக்கும் அடிப்படையானவை. எவ்வகையான பக்கமாக இருந்தாலும் இவை கட்டாயமாக இருக்க வேண்டியவை.

3.இப்போது File Menu-வில் உள்ள save பட்டனை அழுத்தி அதனை செமித்து விடுங்கள். இப்பொழுது உங்களின் முதல் பக்கம் உருவாகி விட்டது.

Back to top



வர்ணங்களைத் தேர்ந்தெடுத்தல்

படி 3.

1. இப்பொழுது மற்ற அடுத்த நடவடிக்கையாக, பக்கத்தின் வர்ணம், எழுத்துரு, எழுத்துக்களின் வர்ணம், தலைப்புக்கள் ஆகியற்றை வடிவமைக்கும் முறையைக் கவனிப்போம்.

2. ஒரு பக்கத்தின் வர்ணம், அவ்வலைப்பக்கத்தில் வருகின்ற எழுத்துக்களின் வர்ணம், அவ்வலைப்பக்கத்தில் தொடர்பு பகுதிகள் இருந்தால் அவற்றின் வர்ணம், ஆகியவற்றை நிர்ணயிப்பது என்பது பகுதியில் அமைகின்றது.

< body bgcolor="#000000" text="#ffffff" link="#990099"  vlink="#0000ff" alink="#0000ff" >
இங்கு bgcolor="#000000" என்பது வலைப்பக்கத்தின் வர்ணத்தைக் குறிக்கப் பயன்படுவது. 000000 என்பது கருப்பு நிறத்தைக் குறிக்கப் பயன்படுவது. இதைப் போலவே text="#ffffff" என்பது இவ்வலைப்பக்கத்தில் வருகின்ற எழுத்துக்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருப்பதைக் குறிக்கின்றது. link="#990099" மற்றும் vlink="#0000ff" alink="#0000ff" என்பது தொடர்புகளின் வர்ணத்தை நிர்ணயிப்பதற்குப்பயன்படுவன.

குறிப்பு: வர்ணங்களின் குறியீடுகளைக் காட்டும் பல freeware மென்பொருட்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் உங்கள் கணினியில் இறக்கி அதன் மூலம் உங்களுக்குத் தேவையான வர்ணங்களைச் சேர்த்து உங்கள் வலைப்பக்கத்தை உருவாக்கலாம். இந்தப் பாடபகுஹியின் உள்ளடக்கப் பகுதியில் உங்கள் தேவைக்காக மென்பொருட்கள் சில சேர்க்கப்படுள்ளன. அவற்றை பயன்படுத்தி உங்கள் வலைப்பக்கத்தை உருவாக்கிப் பார்க்கலாமே!!.

Back to top



எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தல்

1. உங்கள் வலைப்பக்கம் எந்த எழுத்துருவில் வெளிப்பட வேண்டும் என திட்டமிடக்கூடிய சமயம் இதுதான். பொதுவாக ஆங்கில எழுத்துருக்களில் பக்கங்களை உருவாக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் எழுத்துருக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
Times New Roman
Arial
Verdana
MS Comic Sans

இந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதன் காரணம் என்னவென்றால், இவை உங்கள் கணினியில் எப்படி தெரிகின்றதோ அதே வகையில் மற்றவர்களின் கணினிகளிலும் தோன்றக்கூடியவை.

உங்கள் கணினியின் Programs பகுதியை தட்டி Settings தேர்ந்தெடுத்து, பின்னர் Contol Panel தேர்ந்தெடுத்து Fonts -ஐ தேர்ந்தெடுத்தால் உங்கள் கணினியில் இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்துருக்களின் பட்டியலைக் காண முடியும். இப்பட்டியலில் இருக்கின்ற எந்த எழுத்துக்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை அனைத்தும் எல்லோரது கணினியிலும் உங்கள் கணினியில் தெரிவது போலவே தெரிய வாய்ப்புக்கள் குறைவே! இதனைக் கருத்தில் கொண்டே பொதுவாக இருக்கக்கூடிய 'True Type' எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும்.

கீழ்க்காணும் வரியே உங்கள் எழுத்தை தீர்மாணிக்கின்றது.


Times New Roman எழுத்துக்கு பதிலாக MS Comic Sans வேண்டும் என்றால் கீழ்க்காணும் வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.


நீங்கள் தயாரிக்கவிருக்கும் வலைப்பக்கத்தில் தமிழில் செய்திகள் வருமாறு செய்ய வேண்டுமல்லவா. இப்பயிற்சியின் ஆரம்பத்திலேயே 'முரசு அஞ்சல்' பயன்படுத்தப்படும் என்று சொல்லியிருக்கின்றோம். அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். முரசு அஞ்சலை பயன்படுத்தும் போது உங்கள் கணினியில் TSCu_InaiMathi, TSCu_InaiKathir, TSCu_ArulMathi ஆகிய மூன்று விதமான எழுத்துருக்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கின்றது. உதாரணமாக:




Back to top

அளவை நிர்ணயித்தல்

எழுத்துக்களின் அளவுகள் எழுத்துருக்களைப் தேர்ந்தெடுக்கப் பயன்படும் குறியீடான font குறியீட்டைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றது. உதாரணமாக மேலேயுள்ள உதாரணத்தைப் பாருங்கள். இங்கே எழுத்தின் அளவு 2 என்று குறிக்கப்படுகின்றது. நீங்கள் 1, 2, 3, 4 என்று எண்களைப் பயன்படுத்தி அளவைக் குறிக்கலாம். 1-ன் அளவு மிகச் சிறிதாகவும் 3, 4 போன்றவை பெரிதாகவும் ஆக்கக் கூடிய தன்மை படைத்தவை. இதைத் தவிர h1, h2, h3 போன்ற குறியீடுகளும் எழுத்தின் அளவை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. கீழுள்ள உதாரணத்தைப் பாருங்கள்:

சிறிய எழுத்து

கொஞ்சம் பெரிய எழுத்து

பெரிய எழுத்து

சிறிய எழுத்து

கொஞ்சம் பெரிய எழுத்து

பெரிய எழுத்து

Back to top


 

பயிற்சி பட்டறைக்குச் செல்ல...