படங்கள் - அறிமுகம்
வலைப்பக்கங்களுக்கு உள்ள மிகச் சிறப்பான ஒரு அம்சம் என்னவென்றால் அது வெரும் எழுத்துக்களை மட்டும் உள்ளடக்கியதாக இல்லாமல், படங்கள், இசைகள், படக்காட்சிகள் என்பன போன்ற பல்லூடக சாதனங்களை பயன்படுத்த வழி அமைத்துக் கொடுப்பதேயாகும்.
பொதுவாக ஒரு படத்தை நீங்கள் உங்கள் வலைப்பக்கத்தில் சேர்க்க நினைத்தால் கீழ்க்காணும் விசயங்களை மனதில் கொள்வது சிறப்பு:
1. சேர்க்கவிருக்கும் படத்தின் அளவு - நீங்கள் படத்தினை scanner வழியாகவோ digital camera வழியாக உருவாக்கும் போது படங்கள் அளவில் மிகப் பெரிதாக அமைந்து விட வாய்ப்புண்டு. பொதுவாக ஒரு படம் பெரிதாக இருந்தால் வலைப்பக்கம் பார்ப்பவர்களுக்கு மிக தாமதமாக வந்து சேரும். அதனால் அள்வில் சுமாரான அல்லது சிறிய படங்களைச் சேர்ப்பது சிறப்பு.படங்களின் அளவு 25k க்கு மேலே செல்லும் போது பக்கம் இறங்கும் வெகமும் குறைய அதிக வாய்யுண்டு. இதனை மனதில் கொண்டு உங்கள் படங்களை வலைப்பக்கங்களில் சேர்ப்பது சிறப்பு.
2. படங்களுக்குப் பெயரிடுதல் - இது வலைப்பக்கத்தை உருவாக்குபவர்களுக்கு மிகவும் தேவைப்படும் விசயமாகும். படங்களின் பெயர்கள் அதன் தன்மையை வெளிக்காட்டுவதாக அமைந்திஉக்க வேண்டியது அவசியம். பொதுவாக நீல நிறத்திலான ஒரு கோட்டினது படம் என்று வைத்துக் கொள்வோம். அதனை bline அல்லது b_line அல்லது lineb அல்லது line_b அல்லது lineb1 இப்படி புரியும் வகையில் பெயரிட வேண்டும். ஏன் அதனை blue line எனப் பெயரிடக் கூடாது என்று நீங்கள் பேட்பது புரிகின்றது. ஒரு கோப்பிற்கு பெயரிடும் போது மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவ இவை:
- பெயர் 8 எழுத்துக்களுக்கு மேற்போகாமல் இருக்க வேண்டும்.
- பெயரில் காலி இடமோ, முத்திரைகளோ சேர்க்கப்படக்கூடாது
- பெயர் சிறிய எழுத்தில் அமைந்திருக்க வேண்டும்.
3. கோப்புகளின் தன்மை (extension) - வைய விரிவு வலை 3 விதமான தன்மைகளைக் கொண்ட படங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். அவை .gif .jpg .tif ஆக உங்கள் படங்கள் இவற்ரில் ஒன்றாக குறிப்பாக .gif .jpg வடிவில் அமைந்திருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
Back to top
படங்களைச் சேர்த்தல்
படங்களை முதலில் தயார் செய்து கொள்ளுங்கள். உங்களின் படத்தின் பெயர் line_b.gif என்று வைத்துக் கொள்வோம். அதனை உங்களின் வலைப்பக்கத்தில் சேர்ப்பதற்கு கீழ்க்காணும் குறியீட்டினை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
< img src="line_b.gif">
ஒரு வலைப்பக்கத்தில் எங்கே இதனை சேர்க்க வேண்டும் என்பதைப் பாருங்கள்.
< html >
< head>
< title> < /title >
< /head >
< body >
< img src="line_b.gif">
< /body >
< /html >
Back to top
படங்களின் அளவைக் குறிப்பிடுதல்
படங்களைத் தயார் செய்யும் போது அவை அளவில் பல்வேறு வகையில் உருவாகுவதற்கான வாய்ப்பு உண்டு. ஒரு படத்தை ஸ்கேன் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த படத்தை ஸ்கேன் செய்யும் போது நாம் வைக்கின்றே அளவு கோள்களே அதன் அளவைத் திட்டமிடுகின்றன. கருப்பு வெள்ளையாக படத்தை எடுக்கும் போதும், படத்தின் resolution அளவை குறைத்து வைக்கும் போது அளவில் குறைந்த படங்களை தயாரிக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களிலும் இது சாத்தியமில்லை.
பொதுவாக ஒரு வர்ணப்படத்தை நீங்கள் ஸ்கேன் செய்ய விரும்பினால் அதன் resoltion 100 அல்லது 150 ஆக இருக்கும் வகையில் செய்துகொள்ளுங்கள். வர்ணப் படங்களுக்கு இது போதுமானது. அது எழுத்துக்களாக இருப்பின் (உதாரணமாக கையெழுத்து ஒன்றினை ஸ்கேன் செய்ய விரும்பினால்) resoltion 200, அல்லது 250, அல்லது 300 என வைத்துக் கொள்ளலாம்.
வலைப்பக்க ப்ரோகிராமிங் என்பது ஏனையவற்றுடன் ஒப்பிடும் போது மிகவும் எளிதானதே. ஒரு படத்தை அதன் சுய அளவு மட்டும்தான் நிர்ணயிக்கும் என்பது இல்லாமல் குறியீடுகளின் வழியும் அவர்றை நம்மால் நிர்ணயிக்க முடியும். உதாரணத்திற்கு கீழே உள்ள ஒரே படம் எவ்வாறு பல மாறுபட்ட அளவுகளில் வலைப்பக்கத்தில் காட்டப்படுகின்றது என்பதை கவனிப்போம்.



மேலே இருக்கும் படங்களில் முதலில் இருப்பதுதான் அதன் உண்மையான அளவு. அடுத்தபடியாக வருகின்ற படங்களுக்கு நான் அளவை மாற்றித் தந்திருக்கின்றேன். இந்த மூன்று படங்களின் குறியீடுகளும் உங்களுக்கு கீழே தரப்படுகின்றன.
< img src="suns.gif">
< img src="suns.gif" width="80" height="80">
< img src="suns.gif" width="20" height="20">
மேலுள்ள குறியீட்டைக் கவனியுங்கள். அடிப்படை குறியீட்டோ டு width="80" height="80" என்ற குறியீட்டைச் சேர்த்து படத்தின் அகலத்தையும் நீளத்தையும் மாற்றியிருக்கின்றேன். அதேபோலஅடுத்த படத்தில் குறைத்து மாற்றியிருக்கின்றேன். இந்த வகையில் நீங்கள் உங்களின் பக்கங்களில் படங்களை தேவைக்கேற்ப சேர்த்து அளவினை நிர்ணயிக்க முடியும்.
Back to top
|