|
|
பயிற்சிப் பட்டறை கணினியைப் பற்றி தெரிந்து கொள்ள நிறையவே இருக்கின்றன. கணினியைப் பயன்படுத்தி எத்தனையோ வகையான தரமான படைப்புக்களை உருவாக்க முடியும். இலக்கப் பாடியில் சேர்ந்துள்ள அங்கத்தினர்களும் சரி, ஏனைய வலைப்பக்க பிரியர்களும் சரி; இங்கிருக்கும் பாடங்களைப் படித்து அதனை உங்கள் கணினியில் சோதித்துப் பார்க்கலாம். பொதுவாக இப்பகுதியில் வலைத்தளம் அமைக்கும் பயிற்சிகள், வலைப்பக்கங்களை செர்வரில் சேர்க்கும் பயிற்சிகள், ஈ-மெயில் என்றழைக்கப்படும் மின்னஞ்சல் அனுப்பும் முறைகள், கணினி வன்பொருட்களைப் பற்றிய அறிமுகப் பயிற்சிகள், Microsoft Office-ன் Microsoft Power Point, Microsoft Word, Microsoft Excel போன்ற மென்பொருட்களைப் பற்றிய பயிற்சிகள், மேலும் படங்களை உருவாக்கும் பயிற்சிகள் என பல தரப்பட்ட பாடங்களை தயாரித்து இணைக்க எண்ணியுள்ளேன். எல்லாம் உங்கள் பயன்பாட்டிற்கெனவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட உள்ளன. இதில் சிறப்பு என்ன தெரியுமா....? அனைத்து பாடங்களுமே நமது தாய்மொழியான தமிழில் உங்களுக்கு வழங்கப்படுவதே ஆகும்! கணினியில் பயிற்சிகள் செய்வது கடினம் என பலர் நினைக்கின்றனர். அது உண்மையல்ல..! மிக மிக தேவையான ஒன்றே ஒன்று கடின முயற்சிதான். தீராத ஆர்வமும் கடின முயற்சியும் இருந்தால் நிச்சயமாக உங்களால் பல சாதனகளைப் புரிய முடியும்.. செய்து பாருங்களேன்...!! முயற்சி திருவினையாக்கும்..!!:) |
||
![]() |
Education Section of Suba's Campus | ||