
தமிழக திருப்புவனம் (பழைய இராமனாதபுரம் மாவட்டம்; மதுரைக்கு கிழக்கே 12 மைல்) கிராமத்தில் பிறந்த நாராயணன் கண்ணன் மதுரைப் பல்கலைக் கழகத்தில் உயிர் வேதியியலில் (Biochemistry) முனைவர் பட்டமும், ஜப்பானிலுள்ள எஹிமே பல்கலைக்கழகத்தில் சூழல் வேதியியலில் (ecotoxicology) முனைவர் பட்டமும் பெற்றவர். உடலின் நாளமில்லாச் சுரப்பிகளும், வானம் பாடிக் கவிஞர்களும் தன்னை கவிதை எழுத வைத்ததாகக் கூறும் இவர், கல்லுரி மாணவராக இருந்த போது எழுதிய கவிதைகள் "கணையாழி" யில் பிரசுரமாகின. முதல் சிறுகதை 1978-ல் "குங்குமம்" இதழில் வெளியாகியது. அகில இந்திய வானொலியில் தமிழில் அறிவியல் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பொறுப்பை சில ஆண்டு காலம் வகித்த இவர், கலைக்கதிரில் விஞ்ஞானக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். "சுபமங்களா"வுடனான தொடர்பின் காரணமாக இவரது படைப்பாற்றல் மீண்டும் பொலிவு பெற்றுக் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் 1992 முதல் தொடர்ந்து வெளி வரத்தொடங்கின. ஐரோப்பியப் புகலிலக்கியப் படைப்பாளிகளின் தொடர்பால் இவரது ஆக்கங்கள் ஐரோப்பாவிலும் வெளியாகின்றன. தமிழ்ச்சமய வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள நா.கண்ணன் தொடர்ந்து ஐரோப்பிய தமிழ்க் கோயில்களில் சொற்பொழிவு ஆற்றிவருகிறார். எழுத்து, இசை, சிற்பம், அறிவியல், சமயம், மெய்யியல், அழகியலில் ஈடுபாடு காட்டும் கண்ணன், கீல் (ஜெர்மனி) நகரிலுள்ள ஆல்பிரெக்ட் கிறிஸ்டியன் பல்கலைக் கழகத்தில் சூழலியல் விஞ்ஞானியாக 10 ஆண்டுகள் பணியாற்றி விட்டு இப்போது சிறப்புப் பேராசிரியராக கொரியா மாகடல் ஆய்வு மையத்தில் வேலைபார்க்கிறார்.
ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இவரது பல்வேறு ஈடுபாடுகளுக்கு கீழ்க்காணும் பட்டியல் ஒரு சிறிய உதாரணம்! மேலும் இவர் பற்றிய விவரமறிய! சுட்டுக இங்கு!

கவிதைத் தொகுப்புகள்
கவிதைத் தொகுப்பு (தஸ்கி குறியீட்டில்)

சிறுகதை, குறுநாவல், நாவல்

உரை 
குறுந்தகடு (CD ROM)தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடுகள்
ஃ சித்தி ஜுனைதா பேகம் - முஸ்லிம் சமூகம் தந்த முதல் பெண் தமிழ் எழுத்தாளர்
ஃ தமிழ்நாட்டு மூலிகைகள்
ஃ தமிழகம் கண்ட மருத்துவமுறை
ஃ தமிழின் இளமை/முதுமை

கணினித்தமிழ்

ஆராய்ச்சிக் கட்டுரைகள்
o தமிழ் இணைய மாநாடு 2000 சிங்கப்பூர்
o தமிழ் இணைய மாநாடு 2001 கோலாலம்பூர்
o தமிழ் இணைய மாநாடு 2002 பாஸ்டர் சிடி, கலிபோர்னியா
o மின்னூடகத்தில் தமிழ் முதுசொம் பாதுகாப்பு 2010. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, ஜூன் 23-27, 2010 கோவை, இந்தியா
o தொன்மைத் தமிழகக் கொரிய உறவுகள். 2010. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, ஜூன் 23-27, 2010. கோவை, இந்தியா
o உயர்வுறும் இந்தியா: தூரக்கிழக்கில் இந்தியர் (கருத்தரங்கு), அக்டோபர் 26-27, 2006. தென்கிழக்காசிய கல்வி நிறுவனம் சிங்கப்பூர்
o தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம்: வேர் கொண்டு விண் எழுதல். 2011 உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு, அக்டோபர் 28-30, 2011 சிங்கப்பூர்

வலைப்பூக்கள்
தமிழ் யுனிகோடில் அமைந்தவை:
o கண்ணனின் உலகம் - பொது
o ஆழ்வார்கள் - பேராசிரியர் ஏ.கே.ராமானுஜனின் ஆங்கில மொழிபெயர்ப்புடன்.
o மூன்றாம் கண் - புகைப்படவலைப்பூ
தமிழ் தஸ்கி குறியீட்டில் அமைந்தவை:
o என் மடல் - பொது

இ-தழ்
வானொலி
தொலைக்காட்சி
நேர்காணல், கலந்துரையாடல்
o சன் டிவி - மாலன், ஆண்டோ பீட்டர், கிருஷ்ணமூர்த்தி, தமிழ் கணினியின் வளர்ச்சி, மார்ச் 2002.
o டி.டி.என் (பாரிஸ்) - புத்தம் புதுக்காலை, பிப்ருவரி, 2002.
o தீபம், மே 2002. ஒரு பகுதி இணையத்தில் காணக்கிடைக்கிறது
o விஜய் டிவி, நையாண்டி தர்பார், யூகி சேதுவுடன், பிப்ரவரி 2001
o ஜெயா டிவி, காலை மலர், செப்டம்பர், 2000
o சிஐ டிவி, லண்டன், கவிப்பேச்சு, அ.அமிர்தராஜுடன், டிசம்பர் 2002
o தீபம் டிவி, தொலைதூர நேர்காணல், அறிவியல் வெள்ளி, பிப்ரவரி 07, 2003
o ஜெயா டிவி, காலை மலர், ஆகஸ்ட் 2, 2004. நிழல்வெளி மாந்தர், விலை போகும் நினைவுகள் புத்தகங்கள் குறித்து நேர்காணல்

